அங்கு கொடுக்குற காசு வாங்கிட்டு இப்படியும் பேசுவார்? ஆஸ்கர் நாயகனுக்கு ஏற்பட்ட சிக்கல்..
இந்திய சினிமாவில் இசைப்புயலாகவும் ஆஸ்கர் நாயகனாகவும் விளங்கி வருபவர் ஏ ஆர் ரகுமான். பிஸியான தருணத்தில் தான் தமிழை பற்றி பெருமையாக பேசியும் செயல்பட்டு நடந்து கொள்வதும் மக்களுக்கு நல்ல ஓர் மதிப்பை பெற்று வருகிறார்.
சமீபத்தில் இந்திக்கு எதிராக பல சர்ச்சை கருத்துகளை பேசி வருகிறார். ஹிந்தி மொழி தேவை இல்லை என்று அவர் பல இடங்களிலும் தன்னுடைய கருத்தை ஆழமாக பதிவு செய்து வருகிறார். இதனால் அவருக்கு நிறைய எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.
சமீபத்தில் தமிழ் திரைப்படத்தை அனைவரும் தலை நிமிர்ந்து பார்க்கவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு காரணம் தமிழ் மொழிகளில் இசையமைத்ததை விட இந்தியில் தான் அதிகமாக ரகுமான் இசையமைத்தும் இருக்கிறார். பாலிவுட்டில் இருந்து சம்பாதிக்கும் காசும், அவர்கள் கொடுக்கும் கௌரவமும், அதன் மூலம் கிடைத்த ஆஸ்கர் விருதும் மட்டும் உங்களுக்கு வேண்டும் ஆனால் ஹிந்தி வேண்டாமா என்று அவரை வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஏ ஆர் ரகுமான் தான் செல்லும் இடமெல்லாம் தமிழை தான் பெருமைப்படுத்தி பேசுவார் என்றும் கூறி வருகிறார்கள்.