கமல் இந்தியன் 2-ல work பண்ண சொன்னார் ஆனால் ஷங்கர்.. ஏ.ஆர் ரகுமான் வெளிப்படை..
Kamal Haasan
A R Rahman
Indian 2
By Dhiviyarajan
இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற ஏ.ஆர் ரகுமாணின் பங்கும் இருக்கிறது. தற்போது உருவாகி இருக்கும் இந்தியன் 2 படத்தில் ஏ.ஆர் ரகுமானுக்கு பதிலாக அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு ஏ.ஆர் ரகுமானிடம், இந்தியன் 2வில் ஏன் இசையமைக்கவில்லை என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு அவர், கமல் என்னிடம் இந்தியன் 2 படத்தில் work செய்யுமாறு தொடர்ந்து கமல் கேட்டு கொண்டு இருந்தார். அதை இயக்குனர் தான் முடிவு செய்யவேண்டும். ஒரே ஆளு கிட்ட work பண்ணிட்டு இருந்தால் போர் அடித்துவிடும். அதில் சவால் இருக்காது.
ஷங்கர் இதற்கு முன்பு அந்நியன், நண்பன் போன்ற படங்களிலும் வேறொரு இசையமைப்பாளருடன் தான் பணியாற்றினார் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு போவது ஒரு நல்ல விஷயம் தான் என்று ஏ.ஆர் ரகுமான் கூறியுள்ளார்.