நடிகர் அருண் உடன் காதல்.. திருமணம் எப்போது தெரியுமா? உறுதிபடுத்திய பிக் பாஸ் அர்ச்சனா!!

Bigg Boss Serials Actors Tamil Actors Archana Chandhoke
By Dhiviyarajan May 22, 2024 10:28 AM GMT
Report

சீரியல் நடிகையான அர்ச்சனா, கடந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்று வரை முன்னேறி டைட்டில் பட்டத்தை வாங்கி அசத்தினார்.

சமீபத்தில் அர்ச்சனாவும் நடிகர் அருணும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் தகவல் வெளிவந்தது. இது தொடர்பாக பேசிய அர்ச்சனா, நானும் அருணும் காதலிக்கிறோம் என்று தகவல்கள் வந்துகொண்டு இருக்கிறது. இருவருமே நல்ல நண்பர்கள். மற்ற அனைத்துமே மக்களின் கற்பனை.

சமூக வலைத்தளங்களில் சில விஷயங்கள் நம்புற மாதிரியும், கற்பனைக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கிறது. நான் இப்போது என்னுடைய கேரியரை வளர்த்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் தான் திருமணம் செய்துகொள்வேன். அது வாழ்க்கையின் ஒரு பகுதி என நினைக்கிறேன் என்று அர்ச்சனா கூறியுள்ளார்.

நடிகர் அருண் உடன் காதல்.. திருமணம் எப்போது தெரியுமா? உறுதிபடுத்திய பிக் பாஸ் அர்ச்சனா!! | Archana Chandhoke Clarify Relationship With Arun