விஜய் டிவி கொடுத்த ஏமாற்றம்.. பழைய இடத்துக்கே தாவிய விஜே அர்ச்சனா, மகள் சாரா..
பிரபல தொலைக்காட்சி சேனல்களில் விஜேவாக பணியாற்றி பிரபலமானவர் விஜே அர்ச்சனா. 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜே பயணத்தை தொடர்ந்த அர்ச்சனா சன் டிவி நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியானார்.
அதன்பின், ஜீ தொலைக்காட்சி சேனலில் பல நிகழ்ச்சிகளை தன் மகள் சாராவுடன் தொகுத்து வழங்கி வந்தார். இடையில் கசப்பான கருத்து வேறுபாடு ஏற்பட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் இரு ஆண்டுகளாக இருந்து நிகழ்ச்சிகளை தொடர்ந்தார்.
இந்நிலையில், விஜய் டிவியை விட்டுவிட்டு மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவி இருக்கிறார். சூப்பர் மாம் 1, 2 சீசன்களை தொகுத்து வழங்கியதால் மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சி அழைப்பு விடுக்க ஓகே சொல்லி சென்றுள்ளார்.
அதன் பிரமோ வீடியோ வெளியாகியுள்ளது,. இந்நிகழ்ச்சி செப்டம்பர் முதல் ஞாயிறு தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிப்பரப்பாகுமாம்.