தற்கொலைக்கு முயன்றேனா? வதந்திக்கு பதிலடி கொடுத்த தொகுப்பாளினி அர்ச்சனா..
விஜே அர்ச்சனா
சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாறி பிரபலமானவர் தான் விஜே அர்ச்சனா சந்தோகி.
2004ல் வினீத் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து சாரா வினீத் என்ற மகளை பெற்றெடுத்து வளர்த்து சமீபத்தில் தன்னுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வைத்தார்.

40 வயதை கடந்து விட்டபோதிலும் தற்போது வரை பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2021ல் மூளையில் ஏற்பட்ட பிரச்சனைக்காக சர்ஜரி செய்து அதிலிருந்து மீண்டு வந்தார் அர்ச்சனா.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், ஒரு கட்டத்தில் மன உளைச்சல் காரணமாக தன்னுடைய கணவருடன் தினமும் சண்டை வந்துக்கொண்டிருந்தது. எனவே இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிடலாம் என்று முடிவெடுத்தோம்.
அப்போது எங்களின் மகள் தான் இருவரையும் அழைத்து பேசினாள். எல்லா பிரச்சனையும் ஒருவருக்கொருவர் அன்பை உணர வைத்தப்பின் அப்படியே அதை விட்டுவிட்டு இன்று சேர்ந்துவிட்டோம்.
மேலும், வேறொரு பேட்டியில், அர்ச்சனா, கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக வீடியோ ஒன்று வெளியானது. இதையறிந்த அர்ச்சனா, நான் தற்கொலை எல்லாம் செய்து கொள்ளமாட்டேன், என் கணவருடன் பிரச்சனை வந்தால் நான் தான் அவரை அடிப்பேன் என்று கூறி வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் விஜே அர்ச்சனா.