அவர் முன்னணி ஹீரோ, ஆடையை முட்டிக்கு மேல் தூக்கி காட்ட சொல்லி என்னை..சிம்பு பட நடிகை பரபரப்பு
தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அர்ச்சனா மாரியப்பன் இதனை அடுத்து கலகலப்பு, வாலு, வெள்ளைக்கார துரை, ஸ்கெட்ச் கலகலப்பு, பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு அர்ச்சனா மாரியப்பன் சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ஒரு முன்னணி இயக்குனரின் படம். அந்த இயக்குனரின் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை.
அந்த படத்தில் ஹீரோவாக நடிப்பவர் முன்னணி ஹீரோ தான். அந்த படத்தில் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆடிசனுக்கு அழைத்தார்கள். அங்கு நானும் சென்று இருந்தேன்.
ஆடிசன் நடந்தது சிறிது நேரம் கழித்து அந்த இயக்குனர் என்னை அவருடைய அறைக்கு அழைத்தார். நானும் சென்றேன். அந்த இடத்தில் யாரும் இல்லை இயக்குனர் மட்டும் தான் இருந்தார்.
அப்போது இயக்குனர் என்னை நர்ஸ் உடைய அணிய வேண்டும் என்று அதுக்கு அழைத்தேன். நீங்கள் பேண்டை முட்டிவரை தூக்குங்கள் என்று கூறினார். அவர் எந்த நோக்கத்தில் அப்படி செய்ய சொன்னார் என புரிந்து கொண்டு அங்கு வந்துவிட்டேன் என்று அர்ச்சனா மாரியப்பன் கூறியுள்ளார்.