வேறு சேனலுக்கு சென்றதும் விஜய் டிவியை தாக்கி பேசும் அர்ச்சனா மகள்

By Parthiban.A Sep 11, 2022 01:20 PM GMT
Report

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட அர்ச்சனா அந்த ஷோ மூலமாக கெட்ட பெயர் எடுத்துக்கொண்டு தான் வெளியில் வந்தார். அவர் தனக்கென ஒரு கேங் சேர்த்து வைத்துக்கொண்டு குரூப்பிஸம் செய்கிறார் என அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்தபிறகு விஜய்டிவியில் தொகுப்பாளராக பணியில் சேர்ந்து கொண்டார் அர்ச்சனா. சில ஷோக்களும் தொகுத்து வழங்கினார். ஆனால் தற்போது விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழில் ஷோ தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தற்ரோது அர்ச்சனாவின் மகள் ஸாரா அளித்த பேட்டியில் பிக் பாஸ் மூலமாக அம்மாவின் பெயரை கெடுத்துவிட்டார்கள் என கூறி இருக்கிறார்.

'அவர் உண்மையாக தான் இருந்தார். என் அம்மா எப்படி என எனக்கு தெரியும். ஆனால் மற்றவர்கள் பேசுவதை கேட்க முடியவில்லை. அதனால் அர்ச்சனா பிக் பாஸ் சென்றது எனக்கு பிடிக்காத ஒன்று' என ஸாரா தெரிவித்து இருக்கிறார்.

வேறு சேனலுக்கு சென்றதும் விஜய் டிவியை இப்படி பேசுகிறாரே என நெட்டிசன்கள் ஸாராவை விமர்சித்து வருகிறார்கள்.