இப்போதைக்கு காதலும் இல்லை, கல்யாணமும் இல்லை!! காட்டமாக பேசிய அர்ஜுன் தாஸ்..
அர்ஜுன் தாஸ்
தமிழ் சினிமாவில் தன்னுடைய கம்பீரமான குரல் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த நடிகர் அர்ஜுன் தாஸ், இயக்குநர் ஹரிஷ் இயக்கத்தில் அன்னாபென் நடித்த கான்சிட்டி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த வாரம் வெளியாகும் இப்படத்தின் பிரமோஷனுக்காக அளித்த பேட்டியொன்றில், காதல், திருமணம், விஜய், அஜித் குறித்து பேசியுள்ளார்.
கான்சிட்டி
அதில், நான் நடித்த அனைத்து படமும் முடிந்தவுடன் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். பலர் தனிப்பட்ட முறையில், தங்களின் கருத்துகளையும் விமர்சனங்களையும் வைப்பார்கள். அந்த கருத்துக்கள் என்னுடைய அடுத்தடுத்த படத்தேர்வுகளிலும் நடிப்பிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

என்ன மாதிரியான கதையில் நடிக்க வேண்டும் என்றும் எந்த மாதிரியான நடிப்பை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் என்றும் புரிந்து கொண்டேன். என் பெற்றோர்களும் படம் வெளியானப்பின் ஊடகங்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை கேட்பார்கள்.
கான்சிட்டி குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய அழகான, மகிழ்ச்சியான படம். கதையை பறி அதிகம் சொல்ல விரும்பவில்லை, ஆனால் ஒரு குடும்பம், அவர்களின் வாழ்க்கை, அதில் நடைபெறும் உணர்வுபூர்வமான தருணங்கள், நகைச்சுவை, சந்தோஷமான அனுபவங்கள் ஆகியவற்றை மையமாகக்கொண்டு படம் உருவாகியுள்ளது.

காதலும் இல்லை, கல்யாணமும்
மேலும் பேசிய அர்ஜுன் தாஸ் காதல், திருமண செய்தி குறித்து பேசுகையில், எங்கிருந்து அந்த செய்தி வந்தது என்று தெரியவில்லை, வீட்டில் இருந்தும், உறவினர்களிடம் இருந்தும் தொடர்ந்து அதைப்பற்றி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால் சமீபத்தில்
நிச்சயதார்த்தமோ, திருமண ஏற்பாடுகளோ எதுவும்
இல்லை, இப்போதைக்கு காதல், திருமணம் இல்லை,
சினிமா மட்டுமே என்று கூறியிருக்கிறார்.