’எனக்கான முகவரியை தந்தவர் அவர்'.. லோகேஷ் குறித்து மனம் திறந்து பேசிய அர்ஜுன் தாஸ்
அர்ஜுன் தாஸ்
கைதி படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகராக மாறியுள்ளார் அர்ஜுன் தாஸ். இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த குட் பேட் அக்லி படத்தில் இரட்டை வேடத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார்.
மேலும் கடந்த வாரம் bomb எனும் படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து வித்தியாசமான கதைகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ், தன்னை அறிமுகம் செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அர்ஜுன் தாஸ் ஓபன் டாக்
இதில் "லோகேஷ் கனகராஜ் அழைத்தால், தயங்காமல் வில்லன் வேடத்தில் நடிப்பேன். எனக்கு கதை கூட அவர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனக்கான முகவரியை தந்தவர் அவர் என்பதால், அவர் சொல்லும் கதாபாத்திரத்தில் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன்" என கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக கூலி படம் வெளிவந்தது. இப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனாலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ரஜினிகாந்த் - கமல் இணையும் படத்தை லோகேஷ் இயக்கப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.