நாளை சச்சின் மகன் அர்ஜுன் - சான்யா திருமணம்!! கவனத்தை ஈர்த்த மகள் சாரா டெண்டுல்கர்..

Sachin Tendulkar Arjun Tendulkar Marriage Sara Tendulkar
By Edward Mar 04, 2026 10:45 AM GMT
Report

சச்சின் மகன் அர்ஜுன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் ரெண்டுல்கர், இந்த ஆண்டு லக்னோ அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ளார்.

26 வயதான அர்ஜுன் தன்னுடைய நீண்டகால தோழியான சானியா சந்தோக் என்பவரை காதலித்து வந்துள்ளார். சான்யா, அர்ஜுனின் அக்கா சாரா டெண்டுல்கரின் தோழி.

நாளை சச்சின் மகன் அர்ஜுன் - சான்யா திருமணம்!! கவனத்தை ஈர்த்த மகள் சாரா டெண்டுல்கர்.. | Arjun Tendulkar Sania Chandoks Wedding Sara Photos

இருவரின் காதலுக்கு சாராவும் ஒரு காரணமாக இருந்துள்ளார். தற்போது அர்ஜுன் - சான்யாவின் திருமணம் நாளை மார்ச் 5 ஆம் தேதி பிரமாண்டமான முறையில் நடக்கவுள்ளது.

திருமணத்திற்கு பல அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் சச்சின். நாளை திருமணம் நடக்கவுள்ள நிலையில், இன்று காலை சங்கீத் நிகழ்ச்சி மும்பையில் நடந்துள்ளது.

சாரா டெண்டுல்கர்

நிகழ்ச்சிக்கு பலரும் கலந்து கொண்ட நிலையில், சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். விலையுயர்ந்த லெகங்கா ஆடையணிந்து அவர் வந்து இறங்கிய வீடியோவும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery