பிக்பாஸ் 8 சீசன்களின் A R M பேட்டர்ன்-ஐ உடைத்த முத்துகுமரன்.. அடுத்த சீசன் வெற்றியாளர் R..
பிக்பாஸ் சீசன் 8
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கி 2025 ஜனவரி 19 ஆம் தேதி இரவு கிராண்ட் ஃபினாலே நடந்து முடிந்தது. 24 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் 8ல் முத்துக்குமரன், செளந்தர்யா, விஷால், பவித்ரா மற்றும் ரயான் டாப் 5 இடத்தினை பிடித்தனர்.
இறுதியில் பிக்பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டு ரூ. 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசினை தட்டிச்சென்றார். பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் நிகழ்ச்சி முடிந்து தங்கள் வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
A R M பேட்டர்ன்
இந்நிலையில் இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிகளின் டைட்டில் வின்னர்களின் முதல் எழுத்து A R M A R M A என்று ஆரம்பிக்கும். ஆனால் அந்த பேட்டர்ன் இந்த சீசன் மூலம் உடைந்திருக்கிறது.
அதாவது A எழுத்திற்கு பின் R எழுத்துள்ள போட்டியாளர் தான் டைட்டிலை கைப்பற்ற வேண்டும். ஆனால் முத்துக்குமரன் டைட்டிலை கைப்பற்றியதால் A R M பேட்டர்ன் என்பது நிலைக்காமல் போயுள்ளது.
இருந்தபோதிலும் முத்துக்குமரன் என்பதால் அந்த மூன்று ஆங்கில எழுத்தான A R M எழுத்துக்கள் உள்ள நபர் வெற்றிப் பெறுவார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது பிக்பாஸ் குழு.
அடுத்த சீசன் 9ன் வெற்றியாளர் கண்டிப்பாக R என்ற ஆங்கில எழுத்து ஆரம்பிக்கும் நபர் தான் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
Congratulations #Muthukumaran 👏👏🥳🔥
— BB Mama (@SriniMama1) January 18, 2025
So ARM pattern continues 🥳🥳✌️
Last season Archana Ravi so AR & M 🫣🫣#BiggBoss8Tamil #BiggBossTamil8 #BiggBossTamilSeason8 pic.twitter.com/MvVNUpJcuO