நடிகையின் வீட்டிற்கு பவுன்சர்களுடன் சென்ற அர்ணவ்!! கதவை திறக்காத சீரியல் நடிகை திவ்யா..
சின்னத்திரையில் சமீபகாலமாக பெரியளவில் பேசப்பட்டு வருவது அர்ணவ் - திவ்யா விவகாரம் தான். செவ்வந்தி சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் திவ்யா ஸ்ரீதர். செல்லம்மா சீரியலில் நடித்த நடிகர் அர்ணவ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் மாறிமாறி புகார்களை கூறி வந்தனர்.
தன்னை கர்ப்பமாக்கி அடித்து சித்ரவதை செய்வதாக கூறிய திவ்யா சமீபத்தில் தான் குழந்தையை பெற்றெடுத்தார். இதன்பின் சீரியல் நடித்து வந்த திவ்யா அர்ணவ் திருநங்கை மற்றும் ஆண் பைலட் ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதற்கு அர்ணவ், தன்னுடைய ரசிகர்களுடன் தனியாக சந்திக்க ஒரு மணிநேரத்திற்கு 1 லட்சம் பணம் தருவதாக கூறினார். ஆனால் திவ்யாவின் சமுகவலைத்தள அக்கவுண்டில் இருந்து நான்கு லட்சம் போதாது 8 லட்சம் வேண்டும் என்று பேரம் பேசியதாகவும் அர்ணவ் கூறியுள்ளார்.
இந்நிலையில், திவ்யா வசித்து வரும் வீட்டிற்கு பவுன்சர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் சென்றுள்ளார் அர்ணவ். ஆனால் திவ்யா பூட்டிக்கொண்டு அர்ணவை உள்ளே அனுமதிக்காமல் இருந்துள்ளார். நான் வெளியில் வரமாட்டேன், போலிஸ் மற்றும் என் வழக்கறிஞர் வருகிறார், அவர்கள் பேசுவார்கள்.
கோர்ட் ஆடர் இருக்கு நீங்க வரக்கூடாது, எனக்கு இன்பார்ம் பண்ணாம எப்படி வருவீங்க என்று பதில் கொடுத்துள்ளார். அதன்பின் அர்ணவ் இது என்னுடைய வீடு என கூறி வாதிட்டதை அடுத்து போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.