அந்த மாதிரி அத்துமீறி நடந்து கொண்ட தந்தை..கார்த்தி பட நடிகை பகீர் குற்றச்சாட்டு!.ஷாக்கில் ரசிகர்கள்

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 06, 2023 06:05 AM GMT
Report

2018 -ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அர்த்தனா பினு.

இவர் தமிழ் படங்களை தாண்டி மலையாளம் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அர்த்தனா பினு தன்னுடைய சொந்த தந்தை மீது பகிர் குற்றச்சாற்றை வைத்துள்ளார்.

அதில் அவர், காலை 9:45 மணியளவில் காவல் நிலையத்திற்கு உதவி கேட்டும் இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பே என் அம்மா அப்பாவும் விவாகரத்து செய்து கொண்டனர். அம்மாவும் நானும் சகோதரியும் 85+ வயதுடைய எனது தாய்வழி பாட்டியுடன் தனியாக வசித்து வருகிறோம்.

என்னுடைய தந்தை அடிக்கடி வீட்டிற்கு அத்துமீறி வந்து என்னையும், என்னுடைய சகோதரியும் கொலை மிரட்டல் விடுகிறார் என்று அர்த்தனா பினு சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.