தொடர்ந்து சரியும் அருண் விஜய்...என்ன தான் ஆச்சு இவருக்கு
Arun Vijay
By Tony
அருண் விஜய்
அருண் விஜய் தமிழ் சினிமாவில் தனக்கன இடத்தை மிகவும் கஷ்டப்பட்டு பிடித்தவர்.
இவர் நடிப்பில் பல படங்கள் வந்தாலும் தடையற தாக்க தான் இவருக்கு பெரிய கம்பேக் படமாக அமைந்தது. இதை தொடர்ந்து அருண் விஜய் என்னை அறிந்தால், குற்றம் 23, தடம், யானை என தொடர் ஹிட் படங்களை கொடுத்தார்.
ஆனால் தற்போது அவர் சமீப காலமாக தொடர்ந்து தோல்வி படங்களை தான் கொடுத்து வருகிறார்.

சினம், மிஷன், வணங்கான் என 3 தோல்விகளை கொடுத்த இவர் ரெட்ட தல படம் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ரெட்ட தல-யும் அவருக்கு தோல்வி படமாக அமைய, அருண் விஜய் கண்டிப்பாக தன் பட ஸ்டைலை மாற்றிக்கொள்ளும் நிலையில் உள்ளார்.
அடுத்தடுத்து அவர் கவனமாக தன் படங்களை தேர்ந்தெடுத்து பழைய விக்டராக வரவேண்டும் என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்.