வாயால் கெட்ட இயக்குனர்? ஓயாத பிரச்சனைக்கு முடிவு கட்டிய அருண் விஜய்..

Arun Vijay Priya Bhavani Shankar
By Edward Jun 21, 2022 09:40 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடிகராக இருந்து நடித்த படங்கள் எதுவும் மக்களிடம் பெரியளவில் ஈர்க்காததால் ஓரங்கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டார் அருண் விஜய். இதையடுத்து என்னை அறிந்தால் படம் முழுக்க முழுக்க அருண் விஜய் ரோல் ரசிகர்களால் கவரப்பட்டு நல்ல வரவேற்பு பெற்றார்.

அதன்பின் கதையை நல்ல முறையில் தேர்ந்தெடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் ஹரி இயகத்தில் யானை படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

படத்தின் டிரைலர் வெளியாகி இன்னும் படம் ரிலிசாகாமல் பிரச்சனையில் உள்ளது. சமீபத்தில் கூட இப்படத்தின் பிரஸ்மீட்டின் போது இயக்குனர் ஹரி கெட்டவார்த்தையில் பேசியது சர்ச்சையானது.

படம் வெளியாவது சில சிக்கள் இருந்து தள்ளிச்சென்று வருவதால் யானை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்க்கு கொடுத்து விடலாம் என்று யோசனையில் அருண் விஜய் இருந்து வருகிறாராம். எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் வெளியிடுவார்கள் என்று ஒரு முடிவில் படக்குழு எடுத்துள்ளார்களாம்.