யாருக்கும் இது வரவே கூடாது! தன் மனைவியை இறுதி சடங்கில் கூட தொடமுடியாத சூழலில் அருண்ராஜா!

arunraja kamaraj sindhuja kanaa
By Edward May 18, 2021 09:45 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுடன் சிறு கதாபாத்திரத்தில் வரும் நடிகர்களை போன்று மான் கராத்தே, ராஜா ராணி, ரெமோ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் அருண் ராஜா காமராஜ். நடிப்பு தவிர்த்து பாடல் ஆசிரியராக கடந்த 2012ல் இருந்தே எழுதி பல விருதுகளையும் பெற்றார்.

இதையடுத்து கனா என்ற படத்தினை இயக்கி இயக்குநர் அவதாரமும் எடுத்து புகழ் பெற்றார். இதற்கெல்லாம் ஒரு காரணமாக தன் மனைவி சிந்துஜாவை மேடையில் கூட பெருமைப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அருண் ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரானா வைரஸால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

தற்போது அருண்ராஜா காமராஜிற்கும் கொரானா வைரஸ் உறுதியானதால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதால் மனைவியின் முகத்தை கூட பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். வெறும் 34 வயதே ஆன சிந்துஜா இறந்திருப்பது சினிமா பிரபலங்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில பிரபலங்கள் நேரில் சென்றும் இறுதி அஞ்சலியும் செலுத்தி வந்துள்ளனர்.