காதலை தூக்கி எறிந்த நடிகை!! வீடுதேடி அரவிந்த் சாமியை பார்த்த வைஸ்ணவி..

Arvind Swamy Indian Actress Tamil Actress Actress
By Edward Aug 06, 2023 10:00 AM GMT
Report

90-களில் இளசுகளின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் அரவிந்த்சாமி. இவர் ரஜினி நடிப்பில் வெளியான தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து தளபதி, இந்திரா, ரோஜா, பாம்பே எனப் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக மாறினார். சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தின் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்தார்.

அரவிந்த் சாமி பிரபல தொழிலதிபரின் தத்து மகன் என்று பரவி வந்தாலும் அதுகுறித்து உண்மையான தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தனிப்பட்ட மற்றும் மனைவியுடன் விவாகரத்து பிரச்சனையால் சினிமாவில் இருந்து 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு விலகினார்.

தந்தை வி டி சுவாமி நடத்தி வந்த கம்பெனிகளை நடத்தி வந்த அரவிந்த் சுவாமி, 2005 ஒரு விபத்தில் சிக்கி முதுகுதண்டில் பலத்த காயம் ஏற்பட்டு நடக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதன்பின் மீண்டும் நடிப்பில் இறங்கி நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரோஜா படத்தின் போது அரவிந்த் சாமி பெண் பார்க்கும் காட்சியில் மணப்பெண்ணாக நடித்திருந்தார் நடிகை வைஸ்ணவி. அப்படத்தில் நடிக்க வைத்த வைஸ்ணவியை அரவிந்த்சாமி காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டிருக்கிறார்.

ஆனால் வைஸ்ணவி, நான் வேறொருவரை காதலிக்கிறேன் என்று காதலை மறுத்துள்ளார். தற்போது நடிகை வைஸ்ணவி பல ஆண்டுகள் கழித்து நடிகர் அரவிந்த் சாமியை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.