அமலா பாலை விட நயன், அனுஷ்கா தான் அதில் சூப்பர்! வாய்க் கொடுத்து மாட்டிக்கொண்ட பிரபல பிளேபாய் நடிகர்..

Arya Amala Paul Anushka Shetty Nayanthara Tamannaah
By Edward Jul 29, 2022 12:45 PM GMT
Report

தமிழ் சினிமாவின் தற்போதைய காலக்கட்டத்தில் பிளேபாய், சாக்லெட் பாய் என்று கூறப்படுபவர் நடிகர் ஆர்யா. அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி ஒரு கல்லூரியின் காதல், வட்டாரம், நான் கடவுள், சர்வம், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன் போன்ற படங்களில் நடித்தும் வந்தார்.

மாப்பிள்ளை நிகழ்ச்சி

பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் ஆர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு பெண் பார்க்க எங்க விட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 16 மாடல் பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்ய போட்டிபோட அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆனால் இறுதி சுற்றில் வந்த 3 பேரில் யாரை கல்யாணம் செய்தாலும் மற்றவர்களுக்கு கஷ்டத்தை கொடுப்பது போல் இருக்கும் என்று கூறிவிட்டார். அதன்பின் தன்னைவிட 17 வயது குறைவான நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு 2021ல் பெண் குழந்தை பிறந்தது.

படங்களில் சக நடிகைகளுடன் நெருக்கமாக நடித்து பிளே பாய் என்றும் கூறப்பட்டவர். அப்படி திரிஷா, நயன் தாரா, அனுஷ்கா, அமலாபால் உள்ளிட்ட நட்சத்திர நடிகைகளுடன் நடித்து சர்ச்சையிலும் சிக்கி இருக்கிறார்.

அனுஷ்காவுடன் காப்பி வித் டிடி

அந்தவகையில் சைஸ் ஹீரோ படத்தில் நடிகை அனுஷ்கா செட்டியுடன் நடித்த போது விஜே டிடி நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டுள்ளனர். மிஸ் பியூட்டி ஃபுல் என்ற டைட்டிலை அனுஷ்கா, நயனில் யாருக்கு கொடுப்பீங்க என்ற கேள்விக்கு நயன் தாராவுக்கு தான் என்று கூறியுள்ளார்.

அதற்கு அனுஷ்கா, யார் கிட்ட அடி அதிகம் வருதோ அவருக்கு தான் சொல்லுவாரு ஆர்யா என்று கூறியுள்ளார். அப்போது ஜில், ஜங், ஜக் என்ற வடிவேலு வசத்தின் அடிப்படையில் யார் யார் என்று கேட்டுள்ளார் டிடி.

அதற்கு ஆர்யா ஜில் நயன்தாரா, அனுஷ்கா செட்டி என்றும் ஜங் லிஸ்ட்டில் அமலா பாலும் என்னிடம் நடிக்காத நடிகைகள் ஜக் லிஸ்ட்டில் தான். என்னுடன் நடிக்காத தமன்னா, காஜல் போன்ற்வர்களை குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது யூடியூப்பில் வைரலாகி வருகிறது.