ஆர்யாவுக்கு ஆசைப்பட்ட பெண் அபர்ணதியா இது!! இப்படி மாறிட்டாங்களே
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல ஆண்டுகள் தொடர்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு பெண் பார்க்கும் படி பிரபல தொலைக்காட்சி சேனலில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.
ஆர்யாவுக்காக 18 பெண்கள் இந்த திருமண போட்டியில் கலந்து கொண்டு ஆர்யாவை ஈர்த்தனர். ஆனால் அவர் யாரையும் திருமணம் செய்யாமல் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.
அவருக்காக போட்டிப்போட்டு தற்போது தமிழ் நடிகையாக ஜொலித்து வருபவர் அபர்ணதி. ஆர்யா மீது அதீத அன்பை வைத்திருக்கும் அபர்ணதி அவரது சமுகவலைத்தள பக்கத்தின் பெயரை இன்னும் ஆர்யாவின் பெயரை மாற்றாமல் இருக்கிறார்.
ஆனால் அதன்பின் ஆர்யாவுடன் நடிக்க மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார் அபர்ணதி. ஒருசில படங்களில் நடித்தப்பின் அடக்கவுடக்கமாக இருந்த அபர்ணதி மாடர்ன் ஆடைக்கு மாறியுள்ளார். தற்போது இறுக்கமான ஜிம் ஒர்க்கவுட் ஆடையில் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.