ஆர்யாவின் முன்னாள் காதலி அபர்ணதியா இது? இன்னும் அவரை மறக்காமல் இருக்காரா..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகை ஆர்யா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் 17 வயது குறைவான சாயிஷாவை திருமணம் செய்து சமீபத்தில் ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார்.
திருமணத்திற்கு முன் தனக்கு பெண் பார்க்க பிரபல தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார். ஆர்யாவை திருமணம் செய்ய 16 மாடல் நடிகைகளை போட்டியாளர்களாக களமிரக்கினார். மிகுந்த ஆர்வத்தோடும் ஆர்யா மீது காதலில் இருந்த அப்பெண்களை கடைசியில் யாரும் வேண்டாம் என்று ஏமாற்றினார்.
அதில் ஆர்யாவை உருகிஉருகி காதலித்தவர்களில் ஒருவராக இருப்பர் அபர்ணதி. நிகழ்ச்சியில் இருவருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்தது. நிகழ்ச்சிக்கு பின் சில படங்களில் கமிட்டாகிய அபர்ணதி, ஜிவி பிரகாஷ் நடித்த ஜெயில் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
தற்போது இறுக்கமான ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதே சமயம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபர்ணதி 6y என்ற எழுத்தினை இன்னும் வைத்துள்ளார். ஆர்யா மீது இன்னும் காதலில் இருக்கிறீர்களா அபர்ணதி என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியும் வருகிறார்கள்.



