இளம் பெண்ணை மிரட்டிய ஆர்யா! பணத்திற்காக செய்ததை ஆடியோவாக வெளியிட்ட ஈழத்துப்பெண்
தமிழ் சினிமாவில் 35 வயதிற்கு மேலும் நடிக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. கடந்த சில ஆண்டுகளாக எப்போது திருமணம் என்று கேட்டு வந்தவர்களுக்கு ஷாக்கொடுக்கும் படி நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுமார் 17 வயது குறைவான நடிகையை திருமணம் செய்தது சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இது ஒரு பக்கம் இருக்க சாயிஷாவை திருமணம் செய்வதற்கு முன் ஆர்யாவிற்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சியாக எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் 16 இளம்பெண்கள் போட்டிபோட வைத்து பின் 3 இறுதி போட்டியாளர்களை திருமணம் செய்ய முடியாது என்று பல காரணம் கூறி மழுப்பினார். இதையடுத்து சாயிஷாவை திருமணம் செய்த நிலையில் சமீபத்தில் அவர்களில் திருமண தினத்தை கொண்டாடினர்.
இந்நிலையில், திருமண நாளை கொண்டாடிய ஆர்யாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பெண் ஆர்யா அவருடைய அம்மாவுடன் சேர்ந்து கொண்டு 80 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியதாக செய்திகள் வெளியானது. தற்போது அதனை தொடர்ந்து ஈழத்து பெண் ஒருவரை ஆர்யா பணத்துக்காக மிரட்டியுள்ள செய்தி காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது.
மேலும் அந்தப் பெண்ணுக்கு ஆர்யா செய்த மெசேஜ் மற்றும் ஆடியோ போன்ற தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இவ்வளவு நாட்கள் ஒன்றும் தெரியாதவர் போல் வலம் வந்து கொண்டிருந்த ஆர்யாவை வம்பில் மாட்டிவிட்டுள்ளது ஆர்யாவை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் பல தயாரிப்பாளர்களையும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் ஆர்யா நடித்துக்கொண்டிருக்கும் படத்தில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரியவருகிறது. இதுகுறித்து ஆர்யா தரப்பிலும் எதுவும் கூறாமல் அமையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.