என்னது ஆர்யா மனைவி சாயிஷாவிற்கு குழந்தை பிறந்தாச்சா? பிரபல நடிகர் வெளியிட்ட செய்தி..

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொள்வது சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி, பிரசன்னா-சினேகா ஜோடிகளை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டவர் நடிகர் ஆர்யா - சாயிஷா. தனக்கான மணப்பெண்ணை தேட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கூட பங்கேற்ற நிலையில் சாயிஷாவை சில ஆண்டுகளில் திருமணம் செய்து கொண்டார் ஆர்யா.

கஜினிகாந்த் படத்தில் இருவரும் ஜோடியாக சேர்ந்து நடித்தபோது காதலித்து வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் நீண்டகால நெருங்கிய நண்பரான நடிகர் விஷால் நான் மாமாவாகிட்டேன் என்று ஆர்யா - சாயிஷாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று டிவிட்டர் பதிவு ஒன்றில் கூறியுள்ளார்.

சாயிஷா - ஆர்யா கூட அவர்களின் சமுகவலைத்தளத்தில் சார்ப்பட்டா பரம்பரை படம் பற்றிய வாழ்த்துக்களுக்கு பதிலளித்து டிவிட் செய்த நிலையில் அவர்கள் கூட இந்த செய்தியை வெளியிடவில்லையே என்று ரசிகர்கள் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்