கப்பலில் பார்ட்டி! போதை பொருள் கும்பலுடன் தொடர்பா? ஷாருக்கான் மகனை காப்பற்ற போராடும் பாலிவுட்..
பாலிவுட் சினிமாவில் தற்போது பெரிய செய்தியாக பேசப்படும் விஷயம் போதை பொருள் விவகாரம் தான். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையில் ஆரம்பித்த இந்த விஷயம் தற்போது வரை நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அந்தவகையில் நடிகை ஹாருக்கான் மகன் ஆர்யன் கான் சொகுசு கப்பல் ஒன்றில் கேளிக்கை விருந்து ஒன்றினை நடத்தியுள்ளார். இதையறிந்து பார்ட்டியில் போதை பொருள் பயன்படுத்தியதாக மும்பையொல் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலை போதை பொருள் தடுப்பு பிரிவினர் மறித்து ஷாருக்கான் மகன் உட்பட 8 பேரை கைது செய்தனர்.
சோதனையில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஆர்யன் உட்பல 7 பேருக்கு 7 ஆம் தேதி வரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தனர். ஆர்யன் உள்ளிட்ட 7 பேரின் மொபைல் போனில் பேசப்பட்ட உரையாடகள் மற்றும் புகைப்படங்களை ஆராய்ந்து விசாரனை செய்து வருகிறார்கள். ஆர்யன் கான் தவறு எதுவு செய்யவில்லை எந்த வழக்கும் அவர்மீது இதற்கு முன்பு இல்லை என்று கூறி விசாரணைக்கும் தயாராக இருக்கிறார் என்றும் கூறியிருந்தார் ஆர்யன் தரப்பு வக்கீல் சதீஷ்.
இந்நிலையில் போதைபொருள் தடுப்பு பிரிவினர் ஆர்யன் கானின் மொபைல் போனில் பதிவிருந்த தொடர்புகள் போதைபொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தனி பிரிவினர் செல்போனில் இடம்பெற்றுள்ள உரையாடலகளை ஆய்வு செய்து வருகிறார்கள். ஆய்வு முடிந்த பின்புதான் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது தெரியவரும் என்று கூறியுள்ளனர்.
மேலும் ஆர்யன் கான் இந்த விவகாரத்தில் இருந்து மீட்க பாலிவுட் சேர்ந்தவர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருவதாகவும் அவரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியும் வருகிறார்களாம். இதையும் அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆர்யன் கான் பயன்படுத்திய போதை பொருள் வெளிநாட்டு பொருட்கள் என்றால் சுமார் 10 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும் வாய்ப்புள்ளது என்றும் தெரியவந்துள்ளது.