கதை கேட்கும் போது தூக்கம்.. அஸ்வின் பண்ணா தப்பு இவர் பண்ணா சரியா.. யார் தெரியுமா?

Ashwin Sivaji Ganesan Cooku with Comali
By Edward Sep 15, 2022 05:10 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற போட்டியாளர் அஸ்வின் குமார்.

சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்

இளம் பெண்களின் கவனத்தை ஈர்த்த அஸ்வின் இறுதி போட்டி வரை சென்று 2 ஆம் ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். இதற்கு முன் ஆதித்ய வர்மா படத்திலும் இந்த நிலை மாறும் என்ற படத்திலும் நடித்திருந்தார். குக் வித் கோமாளிக்கு பிறகு பெரியளவில் பேசப்பட்ட அஸ்வின் குமார் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்தார்.

அப்படத்தின் ஆடியோ லான்சின் போது 40 இயக்குனர்கள் கதை கூறியபோது நான் தூங்கி விட்டேன் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இதை கூறியது முதல் எங்கு சென்றாலும் விமர்சனங்களையே சந்தித்து வந்தார் அஸ்வின்.

தூங்கிய நடிகர் திலகம்

அப்படி செய்த அஸ்வினுக்கு முன்பே பழங்கால நடிகர் ஒருவரும் செய்துள்ளாராம். மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தானாம். பெரும்பாலும் சிவாஜி கணேசன் அவர்களிடம் கதை கூற வரும் இயக்குனர்கள் கதை கூறும் போதே தூங்கிவிடுவாராம்.

என்னதான் நடிகர் திலகம் இப்படி இருந்தாலும் அஸ்வினுடன் அவரை ஒப்பிட்டு பேசுவது எந்த விதத்தி நியாயம் என்று விமர்சித்தும் வருகிறார்கள். சிவாஜி ஐய்யா எங்கே அஸ்வின் எங்கே...

ஆனால் தூக்கத்தில் இருந்தாலும் விழிப்புடன் இருந்து கதையை கவனமாக கேட்பாராம். இதனாலேயே சிவாஜி கணேசன் தூங்குவதை பெரியளவில் இயக்குனர்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்களாம்.