டிவி ஷோவுக்கு பாட வந்த கனடா தமிழ்ப்பெண்!! நிர்வாண பூஜை செய்து மிரட்டிய கிளி ஜோதிடர்..
தொலைக்காட்சி சேனலில் பாட்டு பாடும் ஷோவில் வெற்றிப்பெற தன்னை நம்பிய இலங்கை தமிழ் பெண்ணை ஆடையின்றி படம் எடுத்து மிரட்டிய சென்னை பெசண்ட் நகர் கடற்கரை கிளி ஜோதிடர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கனடா இலங்கை பெண்
கனடாவில் வசித்து வரும் 37 வயது இலங்கை பெண், அந்த ஷோவில் பாட்டு பாட கலந்து கொள்ள சென்னை வந்துள்ளார். உறவினர் வீட்டில் தங்கி ஷோவில் கலந்து கொண்ட அப்பெண், பெசண்ட் கடற்கரைக்கு சென்றபோது, அங்கு இருந்த கிளி ஜோதிடரிடம் வாக்கு கேட்டார். அதற்காக ரூ. 20 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார் அப்பெண்.
இதனை தொடர்ந்து அப்பெண்ணிடம் உங்களுக்கு நிர்வாண பூஜை பரிகாரம் செய்தால், நீங்கள் பிரபமடைந்து விடுவீர்கள் என்று ஆசைவார்த்தை காட்டியிருக்கிறார் ஜோதிடர்.
இதனை நம்பிய அப்பெண் உறவினர் வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் காலில் நிர்வாணமாக தோன்ற, அதை வைத்து பூஜை செய்வதாக கிளி ஜோதிடர் கூறியிருக்கிறார். அதற்காக ரூ. 70 ஆயிரம் பணம் வாங்கியிருக்கிறார்.

கிளி ஜோதிடர்
இதன்பின் கண்டா சென்ற அப்பெண் மீண்டும் சென்னை வந்து கிளி ஜோதிடரை தொடர்பு கொண்டு பேசியபோது கிளி ஜோதிடர், இன்னொரு முறை நிர்வான பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லி ரூ. 1 லட்சம் கேட்டுள்ளார்.
அதற்கு இலங்கை தமிழ் பெண் மறுக்க, உன் நிர்வான படங்கள் என்னிடம் இருக்கிறது என்று மிரட்டியுள்ளார் கிளி ஜோதிடர். இதுதொடர்பாக இலங்கை தமிழ் பெண் புகார் கொடுக்க, யார் அந்த கிளி ஜோதிடர் என தனிப்படை போலிசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தென்காசியில் பதுங்கியிருந்த இசக்கிமுத்து என்ற கிளி ஜோதிடர் என்று தெரிந்து போலிசார் கைது செய்துள்ளனர்.