அயலி சீரியல் எபிசோட் அப்டேட்: ரித்திகாவுக்கு ஷீலா கொடுத்த மிரட்டல்! கபிலனின் உயிரைக் காப்பாற்ற அயலி எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘அயலி’ தொடரில், அடுத்தடுத்து நடக்கும் அதிரடி திருப்பங்களால் கதை விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது.
ரித்திகாவுடன் கிளம்பும் அயலி, சிவாவுக்கு கிடைத்த வாய்ப்பு!
அயலியும் சிவாவும் ஏதோ ஒரு ரகசிய மிஷனுக்காகக் கிளம்பத் தயாராகிறார்கள். அப்போது அங்கே வரும் ரித்திகா, “நீங்க ரெண்டு பேரும் வேலையை ராஜினாமா பண்ணத்தானே போறீங்க? நானும் உங்ககூட வர்றேன். நீங்க ரிசைன் பண்றதை என் கண்ணாலேயே பார்க்கணும்” என்று அடம்பிடிக்கிறார்.

உடனே உதய பெருமாள், “அவங்க ரிசைன் பண்ணப்போறது உண்மைதான். நீ எதுக்கு தேவையில்லாம அவங்களை டார்ச்சர் பண்ற? கூடவே போய் பார்த்துட்டு வந்துடு” என்று சொல்லிவிடுகிறார்.
அயலியின் திட்டத்தால் தனியாகக் கிளம்பும் சிவா!
போகும் வழியில் சாமி கும்பிடணும் என்று அயலி சொல்ல, “ரிசைன் பண்ணப் போறதுக்கு எதுக்கு சாமி கும்பிடணும்? ஏதோ பொய் சொல்ற மாதிரி இருக்கே!” என்று ரித்திகா மீண்டும் சந்தேகப்படுகிறார்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் அயலி, சிவாவிடம், “நீ மிஷனைப் பார்த்துக்கோ, நான் ரித்திகாவைச் சமாளிச்சுக்கிறேன்” என்று சொல்லி அவரைத் தனியாக அனுப்பி வைக்கிறார். இதையடுத்து சிவா மிஷனுக்காகக் கிளம்ப, அயலி ரித்திகாவைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.
கணவன் பற்றிய உண்மையைக் கேட்டு ரித்திகா பிடிவாதம்!
போகும் வழியில், “ஸ்கூல் இந்தப் பக்கம் இருக்கும்போது நீ எதுக்கு வேற பக்கம் போற?” என்று கேட்டு ரித்திகா அயலியை வழியிலேயே நிறுத்துகிறார்.

அதோடு, “என் புருஷன் எதுக்காக வெளிநாட்டுக்குப் போனான்? நீ ஏன் இப்படி எல்லாம் பண்ற? உண்மையைச் சொல்லு!” என்று அயலியிடம் அடுத்தடுத்து கேள்வி கேட்கிறார். ரித்திகாவின் சந்தேகத்தைப் போக்க முடியாமல் அயலி தவிக்கிறார்.
ரித்திகாவுக்கு ஷீலா கொடுத்த அதிர்ச்சி மிரட்டல்!
அந்த நேரத்தில் ரித்திகாவுக்கு ஷீலாவிடமிருந்து ஒரு போன் கால் வருகிறது. அதில், “உன் புருஷன் கபிலன் உயிரோட இருக்கணும்னா, நான் சொல்ற இடத்துக்கு உடனே வரணும்” என்று ஷீலா மிரட்டுகிறார்.
இதைக் கேட்டதும் ரித்திகா அதிர்ச்சியில் உறைந்து போகிறார். நிலைமையைப் புரிந்துகொள்ளும் அயலி, ரித்திகாவுக்குப் பதிலாகத் தானே அந்த இடத்துக்குப் போய் கபிலனைக் காப்பாற்ற முடிவு செய்கிறார்.
கபிலனைச் சுட்டு வீழ்த்தக் காத்திருக்கும் சிவா!
மறுபக்கம், ரகசிய கன்டெய்னர் வரும் வழியில் சிவா தனது ஆட்களுடன் துப்பாக்கிகளைத் தயார் நிலையில் வைத்துக்கொண்டு காத்திருக்கிறார். அதே பாதையில் வர்மாவும் கபிலனும் காரில் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது சிவாவின் குறி கபிலனையும் வர்மாவையும் நோக்கித் திரும்புமா? ஷீலாவின் திட்டத்தை அயலி முறியடித்து கபிலனைக் காப்பாற்றுவாரா? ரித்திகாவுக்கு உண்மை தெரியவருமா? என பரபரப்பான திருப்பங்களை காண அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.