சன் பிக்சர்ஸையே அலற விட்ட அட்லீ, எப்படியிருந்த கம்பெனி இப்படியாகிருச்சே
Atlee Kumar
By Dhiviyarajan
சன் பிக்சர்ஸ் இன்று தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படங்களை தயாரித்து வருகிறது. இவர்கள் தயாரிப்பில் கடைசியாக வந்த ஜெய்லர் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதை தொடர்ந்து அடுத்து தனுஷ் நடிக்கும் ராயன் படத்தை தயாரித்துள்ளனர். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் இதன் அடுத்து அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளனர்.
எப்போதும் சன் பிக்சர்ஸ் படம் என்றால் குறைந்த சம்பளம் அதுவும் சரியாக கொடுத்து விடுவார்கள். பிறகு படம் ஹிட் ஆனால், கார் வாங்கி தருவார்கள், ஆனால், தற்போது அட்லீ படம் 500 கோடி மேல் வசூல் செய்தால் ப்ராபிட்-ல் ஷேர் தரவேண்டும் என்று கேட்க, ஜவான் வெற்றியை பார்த்த சன் பிக்சர்ஸ் இதற்கு ஓகே சொன்னதாக தெரிகிறது.