திருமண விழாவுக்கு இப்படியா போறது? அட்லீயை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

By Dhiviyarajan Jul 06, 2024 10:45 AM GMT
Report

 உலகளவில் மிகப்பெரிய கோடீஸ்வரராக திகழும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் வருகிற ஜூலை 12ம் தேதி நடைபெற இருக்கிறது.

ஆனந்த் அம்பானி நிகழ்ச்சி மார்ச் மாதமே களைகட்ட தொடங்கிவிட்டது. ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராம்சரண், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் என இந்தியவில் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தற்போது திருமணத்தின் சங்கீத் நிகழ்ச்சியில் பாப் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக உலகப் புகழ் பெற்ற பாடகர் ஜஸ்டின் பீபர் கலந்துகொண்டார். மேலும், பல முன்னணி பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பங்கேற்றனர்.

ஜவான் படத்தை இயக்கிய அட்லீ பாலிவுட் பிரபலமாகவே மாறிவிட்டார். தற்போது சங்கீத் நிகழ்ச்சியில் அட்லீ மற்றும் பிரியா அட்லீ வித்தியாசமான கலர் உடையில் வந்துள்ளார்.

திருமண நிகழ்ச்சிக்கு இப்படியா டிரஸ் போடுவது? என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.  

திருமண விழாவுக்கு இப்படியா போறது? அட்லீயை கலாய்க்கும் நெட்டிசன்கள்.. | Atlee Priya Sangeet Celebrations Anant Ambani