10 வயது சின்ன பையனுக்கு ஓகே!! 46 வயது நடிகைக்காக போட்டிப்போடும் நடிகர்கள்..
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் படத்தில் சிறு ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி. சமீபத்தில் மாஸ்டர் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்த சுரேகா, தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். ஏற்கனவே திருமணமாகி மகள் இருக்கும் நிலையில் அவருக்கு இரண்டாம் திருமணம் என்று செய்திகள் கசிந்தது.
சமீபத்தில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கே பி சவுத்ரி, போதைப்பொருள் வழக்கில் சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்து வருவதாக தகவல் வெளியானது. இது ஒரு பக்கம் இருக்க நடிகை சுரேகா வாணி, கே பி சவுத்ரியுடன் படுநெருக்கமாக இருந்த புகைப்படமும் இணையத்தில் வெளியானது.
இதை உணர்ந்து சுரேகா வாணி அதெல்லாம் போலியானது தவறான குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருப்பதாக கூறி முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் சுரேகா வாணியை திருமணம் செய்து கொள்ள சின்னத்திரை நடிகர்களும் வயது குறைவான நடிகர்களும் முயற்சி செய்வதாக அக்கடத்தேச ஊடகங்கள் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் சுரேகாவை விட 10 வயது நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள அவர் ஒப்புக்கொண்டதாகவும் தனக்காகவும் தன் மகளின் எதிர்காலத்திற்காகவும் வாழ்க்கை துணைக்கு ஒரு நபர் வேண்டும் என்பதால் அந்த நடிகரை திருமணம் செய்ய ஓகேவும் கூறியிருக்கிறாராம்.
திருமணம் வயதில் மகள் இருக்கும் நிலையில் இளம் நடிகர்கள் அவருக்காக போட்டிபோடுவதும், வயசு குறைவான நடிகருடன் திருமணத்திற்கு ஓகே கூறியதையும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.