150 ரூபா கூட இல்லையாம்! ஆட்டோ காரருக்கு காசு கொடுக்காமல் 5 மணி நேரம் காக்கவைத்த பிக்பாஸ் நடிகை!

biggboss oviya tamilactress automan
By Edward Sep 10, 2021 12:55 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மெரினா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. இதையடுத்து களவாணி படம் நல்ல வரவேற்பை பெற்று ஒருசில படங்களில் நடிக்க ஆரம்பித்து பிரபலமானார். வாய்ப்பில்லாமல் காணமல் சென்ற ஓவியா பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ரீஎண்ட்ரி கொடுத்தார்.

நிகழ்ச்சியில் பல லட்ச ரசிகர்களை ஈர்த்த ஓவியா பாதியிலேயே வெளியேறினார். டைட்டில் வின்னர் இவர்தான் என்று நினைத்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து தன்னுடைய ஸ்டைலையே மாற்றினார். தற்போது பல படங்களில் கமிட்டாகியும் நடித்து வரும் ஓவியா ஒரு படத்தின் டப்பிங்கிற்காக ஆட்டோவில் சென்றுள்ளார்.

அவசரமாக சென்ற ஓவியா ஆட்டோவில் இருந்து இறங்கி ஆட்டோகாரரை காத்திருக்குமாறு கூறியுள்ளார். பல நேரம் காத்திருந்தும் ஓவியா வராமல் இருந்துள்ளார். வெறும் 150 ரூபாய் கொடுக்காமல் சென்ற ஓவியாவிற்காக எதிர்ப்பார்த்திருந்த ஆட்டோ காரை பார்த்த அங்கிருந்த சினிமா வட்டாரத்தில் இருந்த ஒருவர் அந்த தொகையை கொடுத்து அணிப்பியிருக்கிறார்.