காசு பிரச்சனையால் கைவிரித்த தயாரிப்பாளர்.. சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு..

Sivakarthikeyan Rakul Preet Singh
By Edward Sep 14, 2022 01:20 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற இடத்தினை தன் உழைப்பால் குறுகிய காலத்தில் எட்டியவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளர், காமெடி நடிகர் என்று பயணத்தை ஆரம்பித்து தற்போது கோடியில் சம்பளம் வாங்கும் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார்.

4 வருட உழைப்பு

அவர் நடிப்பில் டாக்டர், டான் போன்ற படங்களில் 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் கடந்த 2018ல் ஆரம்பிக்கப்பட்ட படம் அயலான்.

இயக்குனர் கே ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பானுப்பிரியா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் சைன்ஸ் பிக்ஸன் படமாக உருவாகியது.

படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையில் ஒரு பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்நிலையில் 4 ஆண்டுகளாகியும் இப்படத்தின் சூட்டிங் முடிந்தும் படம் இன்னும் வெளியாகாமல் கிடப்பில் இருக்கிறது.

காசு பிரச்சனையால் கைவிரித்த தயாரிப்பாளர்.. சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு.. | Ayalan Update Sivakarthikeyan And Producer Meet

அயலான் ரிலீஸ்

இதற்கு முதல் பட்ஜெட் பிரச்சனை இருந்ததால் 24 ஏ எம் ஸ்டுடியோ வாங்கி தயாரிப்பில் கேஜி ஆர் நிறுவனம் கைப்பற்றியது.

இதனை அடுத்து சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், மாவீரன் படங்களில் வெளியீடு இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் இருப்பதால் அயலான் படம் அடுத்த சம்மருக்கு பிறகு வெளியாகும் என்று படக்குழு முடிவெடுத்துள்ளார்களாம்.

சமீபத்தில் கூட அயலான் படத்தின் தயாரிப்பாளரை சிவகார்த்திகேயன் சந்தித்து கொண்டதாக கூறப்படுகிறது.