அயலி எபிசோட் அப்டேட்: மாமாவின் மரணத்திற்கு அயலி தான் காரணமா? சிவா வைக்கும் அதிர்ச்சிக் குற்றச்சாட்டு!
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘அயலி’ தொடர், தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் நகர்ந்து வருகிறது. அயலியைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் என அடுத்தடுத்த எபிசோடுகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், மாமாவின் மரணத்திற்கு அயலி தான் காரணம் என்று சிவா குற்றம் சாட்டும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து விவகாரத்தில் அயலியைப் பற்றி தவறாகப் பேசும் செல்லம்!
அயலியைப் பற்றி செல்லம் தவறான கருத்தை உருவாக்க முயற்சி செய்கிறார். “அயலி நீ நினைக்கிற மாதிரி நல்லவள் கிடையாது. உன் வாயாலேயே சொத்துக்களை அவள் பெயருக்கு எழுதி வைக்கச் சொல்லிட்டா. பாதி சொத்தை எழுதிக் கொடுக்கச் சொல்றா” என்று கூறுகிறார். இதைக் கேட்கும் ரித்திகா, “நீங்க நினைக்கிறது தப்பு. அக்கா செஞ்ச தியாகத்துக்கு பாதி சொத்து போதாது, மொத்த சொத்தையும் எழுதிக் கொடுத்திருக்கணும். எனக்கு அக்காவைப் புரிஞ்சுக்க கொஞ்சம் நேரம் ஆச்சு. நீங்களும் சீக்கிரம் அக்காவைப் புரிஞ்சுப்பீங்க” என்று அயலிக்கு ஆதரவாகப் பேசுகிறார்.

வர்மாவின் மிரட்டலால் அதிர்ச்சியில் கபிலன்!
இதற்கிடையில், சிவா உடன் இருக்கும்போது விஜயகுமாருக்கு ஒரு போன் வருகிறது. அயலிக்கு தொடர்ந்து போன் செய்தும் அவள் எடுக்காததால், வீட்டில் நிலைமையைச் சமாளிக்க முடியவில்லை என்றும், உடனே சிவா வீட்டுக்கு வர வேண்டும் என்றும் அழைக்கிறார்கள். மறுபக்கம், வர்மா கபிலனுக்கு போன் செய்து கடுமையாக மிரட்டுகிறார்.
“உன் குடும்பத்தில் மொத்தம் 14 பேர் இருக்காங்க இல்லையா? எல்லோரையும் கவனமா பார்த்துக்கோ. உன் குடும்பத்தில் ஒருத்தரை நான் தூக்கப் போறேன்” என்று வர்மா மிரட்டுகிறார். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த அழைப்பு வர, கபிலன் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.
மாமாவின் மரணத்திற்கு அயலி தான் காரணம் எனக் குற்றம் சாட்டும் சிவா!
வீட்டில் அயலி தனியாக அமர்ந்து கதறி அழுது கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் சிவா, “எதுக்காக அயலி அழற? உன் மாமா இறந்துட்டார்னு அழறியா? உன் மாமாவைக் கொன்றதே நீதானே!” என்று அதிர்ச்சியூட்டும் வகையில் கேட்கிறார்.
இதைக் கேட்டு அயலி அதிர்ச்சியில் “நானா?” என்று கேட்க, சிவா ஆவேசமாக, “ஆமாம், உன்னாலதான்! நீதான் வர்மாவைத் தப்பிக்க விட்ட. வர்மா தப்பிச்சதால தான் அவன் வந்து உன் மாமாவைக் கொன்னான். இப்போ சொல்லு, இதுக்கு யார் காரணம்? நீதானே காரணம்?” என்று கேட்டு அயலியை மேலும் வேதனைப்படுத்துகிறார்.

சிவாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அயலி உடைந்து அழுகிறார்.
அடுத்து என்ன நடக்கப் போகிறது?
மாமாவின் மரணத்திற்கு தான் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் அயலி தவிக்கப் போகிறாரா? சிவாவின் இந்தக் குற்றச்சாட்டை அயலி எப்படி எதிர்கொள்ளப் போகிறார்? வர்மாவின் மிரட்டலில் இருந்து கபிலன் தனது 14 பேர் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்றுவாரா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.