சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா! இந்த நடிகை தூக்கி எறிந்ததால் தான் லேடிசூப்பர் ஸ்டாராகினாராம்..
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையும் லேடிசூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து தற்போது 4 கோடி சம்பளமாக படம் ஒன்றிற்கு வாங்கி கொடிக்கட்டி பறந்து வருகிறார்.
தற்போது அண்ணாத்த படம் முடித்து மேலும் இரு படங்களின் படப்பிடிப்பிற்காக காத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலைமைக்கும் முழுக்க காரணமாக நயன் தாராவிற்கு அமைந்த படம் ஐயா. நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக பள்ளிபருவ பெண்ணாக நடித்து பின் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாகினார் நயன். ஆனால் இப்படத்தில் நடிகை நயன் தாராவிடம் பேசவில்லையாம்.
பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர், இதுபற்றி சமீபத்திய பேட்டியொன்றில் கூறியது. ஐயா படத்தில் இயக்குநர் ஹரி என்னிடம் கதையை கூறி நடிக்க கேட்டார். ஆனால் அந்த நேரத்தில் பல படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருப்பதால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என கூறியுள்ளார்.
மேலும், பல தமிழ் படங்கள் வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்கமுடியாமல் போனது. தற்போது மலையாள சினிமாவில் நல்ல பெயர் இருக்கிறது. சில படங்கள் கொரோனாவால் தள்ளி வெளியாகவிருகிறது என்றும் கூறியிருக்கிறார் நடிகை நவ்யா நாயர்.