அய்யனார் துணை சீரியல் நடிகருக்கு வாட்ச் பரிசு கொடுத்த இசையமைப்பாளர்
Tamil TV Serials
By Yathrika
அய்யனார் துணை
விஜய் டிவியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் அய்யனார் துணை. 4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரசிகர்களின் பேவரெட் தொடராக செல்கிறது.
சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் 4 அண்ணன்-தம்பிகள் இதில் ஒரு உறவோடு உள்ளே வரும் நிலா என்ற பெண். அவர் வருகைக்கு பிறகு அவர்களின் வாழ்க்கையே மாறுகிறது.
அடுத்தடுத்து சூப்பரான கதைக்களத்துடன் தொடர் ஒளிபரப்பாக இந்த சீரியல் நடிகர் ஒருவருக்கு விஜய் டெலிவிஷன் விருது அவார்ட் கிடைத்துள்ளது.
சோழனாக நடிக்கும் அரவிந்திற்கு Find Of The Year கிடைத்துள்ளது. அதோடு அவருக்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதியிடம் இருந்து வாட்ச் பரிசும் கிடைத்துள்ளது.