வாடிபோடின்னு அசிங்கப்படுத்தி எல்லைமீறிய அசீம்.. செருப்பை கழட்டி பரபரப்பை ஏற்படுத்திய ஆயிஷா

Kamal Haasan Bigg Boss
By Edward Oct 21, 2022 09:41 AM GMT
Report

பிக்பாஸ் 6 சீசன் கடந்த 9 ஆம் தேதி கமல் ஹாசன் அவர்களால் பிரம்மாண்ட முறையில் துவக்கி வைத்தார். 21 போட்டியாளர்கள் வீட்டில் அனுப்பப்பட்ட 12 வது நாளில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள் சில போட்டியாளர்கள்.

பெண்களிடம் எல்லைமீறி தடவுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் அசல் கோளாரை ரசிகர்கள் கண்டபடி விமர்சனம் செய்தும் திட்டியும் வருகிறார்கள். இதேபோல் வரிசைப்படுத்தும் டாஸ்க்கில் ஆயிஷாவை கண்டபடி பேசிய விசயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

வாடி போடின்னு பேச ஆரம்பித்த அசீமை, கண்டபடி திட்ட ஆரம்பித்திருக்கிறார் ஆயிஷா. அதைமீறியும் அசீம் மீண்டும் மீண்டும் பெண் என்றும் பார்க்காமல் வாடிபோடி என்று கேவலமாக நடந்து கொண்டார்.

கொஞ்சமும் கண்ட்ரோல் செய்யமுடியாத ஆயிஷா ஷூவை கழட்டி அடிக்க சென்றுள்ளார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வரும் வாரம் கமல் ஹாசன் என்ன செய்யப்போகிறார் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.