மும்பை இந்தியன்ஸை பொட்டலம் போட்ட CSK.. பாதியிலேயே கிளம்பிய ஆகாஷ் அம்பானி..
ஐபிஎல் 2026 கடந்த மாதம் தொடங்கிய நிலையில், இதுவரை 33 போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. இதில் நேற்று இரவு ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த, El Clasico என சொல்லக்கூடிய மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று மும்பை அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆட வந்த சென்னை அணி, ஆங்காங்கே விக்கெட் விட்டாலும் கூட நன்றாக பேட்டிங் செய்து 207 ரன்களை குவித்து, மும்பைக்கு 208 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதில் சஞ்சு சாம்சன் சதம் அடித்து அசத்தினார்.

இதை தொடர்ந்து 208 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய மும்பை அணி பவர் பிளேவில் மூன்று விக்கெட்களை இழந்து வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அப்போதே இந்த போட்டியில் மும்பை வெற்றிபெறுவதற்கு இருந்த வாய்ப்பு 60% சதவீதம் அவர்களின் கையைவிட்டு நழுவிட்டது.

இதன்பின் சூர்யா குமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகிய இருவரும் சில ஓவர்கள் ரன்களை தேத்தினார்கள். ஆனால், CSK-வின் பந்து வீச்சுக்கு அவர்களும் தங்களது விக்கெட்களை பறிகொடுத்து வெளியேற, அவர்களுக்கு பின் வந்தவர்களும் 'நாங்க மட்டும் எதற்கு மூச்சு பிடித்துக்கொண்டு ஆட வேண்டும்' என்கிற எண்ணத்துடன் அவுட் ஆகி வெளியேறினார்கள். இதனால் 104 ரன்களுக்கு மும்பை அணி சுருண்டது. CSK 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஆகாஷ் அம்பானி, தங்களது டீம் மிகவும் மோசமாக விளையாடியதை பார்க்க முடியாமல், ஸ்டேடியத்தில் இருந்து போட்டி முடிவதற்கு முன்பே பாதியிலேயே கிளம்பிவிட்டார் என கூறி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ:
மேட்ச் முடியும் முன்னரே வான்கடே விட்டு வெளியே வந்த ஆகாஷ் அம்பானி 🫤🥺😥
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) April 24, 2026
மும்பை இவ்வளவு மோசமா ஆட என்ன காரணம்? 💙 pic.twitter.com/9UTm6smIcl