சீரியல் நடிகைகளை தவறாக பேசிய பிக் பாஸ் அசீம்.. கடைசியில் காலில் விழுந்துட்டானே

Bigg Boss Serials
By Kathick Nov 08, 2022 10:00 AM GMT
Report

தவறாக பேசிய பிக் பாஸ் அசீம்

பிக் பாஸ் 6ல் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ஆசீம். இவர் பிரபலமான சீரியல் நடிகர்களில் ஒருவர். சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலில் கதாநாயகனாக அசீம் நடித்துள்ளார்.

அந்த சீரியல் கதாநாயகியை தகாத வார்த்தையை பயன்படுத்தி பேசியுள்ளார் அசீம். அவரை மட்டுமின்றி தன்னுடன் நடித்த சில நடிகைகளையும் தகாத முறையில் பேசியுள்ளார். இதனால் அந்த பெண்கள் அனைவரும் அசீம் தங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும், கேட்டால் மட்டுமே சீரியலில் நடிப்போம் என்று கூறியுள்ளனர்.

தயாரிப்பாளர் அசீமுக்கு ஆதரவாகவே பேசியுள்ளார். இருந்தாலும், அசீம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பெண்கள் உறுதியாக நின்றுள்ளார்கள். இதன்பின்னரே பெண்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளாராம் அசீம். 

சீரியல் நடிகைகளை தவறாக பேசிய பிக் பாஸ் அசீம்.. கடைசியில் காலில் விழுந்துட்டானே | Azeem Bad Behavior With Serial Actress