ரெண்டு மனைவி வெச்சிருந்தா இப்படிதான் நடக்கும்!! நடுத்தெருவுக்கு வந்து குப்பை அள்ளிய பாக்கியலட்சுமி கோபி..

Star fruit Serials Baakiyalakshmi Sathish
By Edward Jul 26, 2023 10:30 PM GMT
Report

ஸ்டார் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் மிகவும் கவர்ந்த சீரியலாக இருப்பது பாக்கியலட்சுமி. சமீபத்திய எபிசோட்டில் இனியா பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று பெருமை சேர்த்ததை குடும்பத்தினர் பலர் பாராட்டினார்கள்.

அடுத்து இனியா என்ன படிக்க வேண்டும் என்று யோசித்து வந்த நிலையில் கோபி இந்த படிப்பை தான் படிக்க வேண்டும் என்று கண்டீசன் போட்டிருக்கிறார்.

என்ன செய்வது என்று இனியா குழப்பத்தில் இருக்க, கோபி ரோலில் நடித்து வரும் நடிகர் சதீஷ் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். நடுரோட்டில் குப்பையை பெருக்கி கூட்டுவது போல் இருக்கும் வீடியோ தான் அது.

அதில், என்ன பாக்குறீங்க, ஆபிஸ் எல்லாம் திவாலாகிடுச்சி என்றும் இப்போ என்னோட நிலமை இதான், ஒன்னு வெட்டுட்டு சந்தோஷமா வாழுங்க ரெண்டு வெச்சிக்கிட்டா இதான் நிலமை என்று கூறியிருக்கிறார்.