ராதிகாவை திருமணம் செய்து கொண்டு ஹனிமூன் சென்ற கோபி.. எங்கு போனார்கள் தெரியுமா?
Serials
Baakiyalakshmi
By Yathrika
பாக்கியலட்சுமி
தமிழ் சின்னத்திரையில் இப்போது பரபரப்பின் உச்சமாக ஓடுகிறது பாக்கியலட்சுமி. எப்படியோ நிறைய நடித்து கோல்மால் செய்து பாக்கியாவிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டார்.
தானாகவே நடக்க ரொம்ப சந்தோஷத்தில் இருந்த கோபி ராதிகாவிடமும் நடித்து இப்போது திருமணம் முடித்தே விட்டார்.
வரவேற்பு நிகழ்ச்சி தான் முடிந்துள்ளது இன்னும் திருமண காட்சிகள் ஒளிபரப்பாகவில்லை.
தற்போது கோபி மற்றும் ராதிகா ஹனிமூனிற்கு கொடைக்கானல் செல்வதாக தெரிகிறது. அங்கு தான் கோபிக்கு பெரிய ஆப்பு வைத்துள்ளார் இயக்குனர்.
அவர்கள் ஹனிமூன் சென்றுள்ள இடத்தில் மெகா சங்கமம் வைத்து டுவிஸ்ட் வைத்துள்ளனர்.
ராதிகா, பாக்கியா, இனியா, செல்வி, ராஜேஸ்வரி என அனைவரும் கொடைக்கானலில் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
