ஒரே நாளைக்கு இத்தனை ஆயிரமா!! பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. தற்போது சீரியலில் விறுவிறுப்பான சம்பவங்கள் சென்று கொண்டிருக்க, கோபியின் இரண்டாம் மனைவி ராதிகாவின் கரு கீலே விழுந்ததால் கலைந்துள்ளது. இதற்கு அம்மா தான் காரணம் என்று கோபி, அம்மா ஈஸ்வரியிடம் கோபப்பட்டு வருகிறார்.
இப்படி கதையை நேர்த்தியாக நகர்ந்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். தற்போது இந்த சீரியலில் பணியாற்றும் டாப் நடிகர் நடிகைகளின் சம்பள விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
பாக்யாவா நடிக்கும் நடிகை சுசித்ராவுக்கு ஒரு நாள் சம்பளமாக 15 ஆயிரம் கொடுப்படுகிறதாம். அவரை தொடர்ந்து கோபியாக நடிக்கும் நடிகர் சதீஷுக்கு 12 ஆயிரம் சம்பளமாகவும் ராதிகாவாக நடிக்கும் நடிகை ரேஷ்மாக்கு 12 ஆயிரம் சம்பளமாகவும் கொடுக்கப்படுகிறது.
மேலும் செழியன் ரோலில் நடித்த விஷாலுக்கு 10 ஆயிரமாகவும், ஜெனி ரோலில் திவ்யா கணேஷுக்கு 10 ஆயிரமாகவும் கொடுக்கப்படுகிறது. இனியா ரோலில் நடித்து வரும் நேஹா மேனன் ஒரு நாளைக்கு 8 ஆயிரம் சம்பளமாகவும் கொடுக்கப்படுகிறதாம்.