நீங்க எவ்வளவு எடை இருப்பீங்க.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகையை உருவ கேலி செய்த நபர்
விஜய் டிவியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இனியா எனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நேஹா மேனன்.
இவர் ராதிகா நடிப்பில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை நேஹாவிடம், ரசிகர் ஒருவர், அவரது எடை எவ்வளவு என்று கேட்க அவரை கடுப்பேத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த நேஹா " எப்போதும் ஒருவரின் எடை பற்றியே ஏன் கவலைப்படுகிறீகள், என் எடையை தெரிந்து கொள்வது என்ன ஒரு பொதுஅறிவா.? இல்லையே.. பின்னர் அதை தெரிந்து நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் ". எடை மூலம் என்னை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அப்படி ஒன்றும் என்னை தெரிந்து கொள்ள வேண்டாம். இது போன்ற கேள்விகள் எழுப்படுவது இது முதல் முறை அல்ல " என கோபமுடன் கூறி இருக்கிறார்.