5 வருட பாக்கியலட்சுமி சீரியலுக்கு எண்ட் கார்ட்!! விஜய் டிவி எடுத்த முடிவு..
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. டிஆர்பி டாப் 10 இடத்தில் இருந்து வந்த பாக்கியலட்சுமி, கடந்த 2020 ஜூலை மாதம் முதல் ஒளிப்பரப்பாகி பல கோடி பார்வையாளர்களை பெற்று வந்தது.
தற்போது இனியா குடும்ப விவகாரம் குறித்த நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில், பாக்கியலட்சுமி சீரியலை முடிக்க திட்டமிட்டனர்.
சுபம்
அந்தவகையில், நேற்று பாக்கியலட்சுமியின் கடைசி எபிசோட்டின் ஷூட்டிங் நடந்து முடிந்திருக்கிறது என்று சீரியலில் கோபி ரோலில் நடித்துள்ள நடிகர் சதீஷ எமோஷ்னலாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.
மேலும், படப்பிடிப்பில் பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
மொத்தம், இதுவரை பாக்கியலட்சுமி சீரியல், 1444 எபிசோட்டுகளை கடந்து 5 வருடங்களாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.