பாக்கியலட்சுமி : விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ராதிகா!! கண்ணீர் விட்டு அழும் கோபி..
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல் பாக்கியலட்சுமி. தற்போது ராதிகா, கோபியை விட்டு கிளம்புவதாக கூறி அவரின் வீட்டிற்கு செல்லும் எபிசோட் ஒளிப்பரப்பாகியது.
இன்றைய எபிசோட்டில், ராதிகாவை தேடி கோபி, ராதிகாவின் வீட்டிற்கு சென்று எங்கே என்று ராதிகா அம்மாவிடம் கேட்கிறார். அங்கே இல்லை என்றதும் கோபி உடைந்து போகிறார். அதன்பின் வீட்டில் கோபிக்கு ஒரு லெட்டர் வருவதை பாக்யா வாங்கி வைக்க, கொஞ்சம் நேரம் கழித்து கோபி வருகிறார்.
ராதிகாவால் சோகத்தில் வீட்டில் வந்து உட்காரும் கோபியிடம் அந்த லெட்டரை பாக்யா கொடுக்கிறார். என்ன லெட்டர் என்று இனியா கேட்க, அதை படித்து பார்த்த கோபி, அம்மா ஈஸ்வரியிடம், ராதிகா டைவர்ஸ் நோட்டீஸ் அனிப்பி இருப்பதாக கூறுகிறார்.
இதனால் கோபி, பாக்யா என்று குடும்பமே அதிர்ச்சியாகியது தான் இன்றைய எபிசோட் முடிவரைகிறது.