ராஜாவா வாழ்ந்த இப்போ கூஜாவா வாழ்ற கோபி.. தாத்தாவான சந்தோஷத்தையும் கொண்டாட விடாத ராதிகா..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. பாக்யாவை விவாகரத்து செய்து தான் காதலித்து வந்த ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து குடும்பத்தை ஒதுக்கி வாழ்ந்து வருகிறார்.
ராதிகாவை திருமணம் செய்த நாள் முதல் பல பிரச்சனைகளை சந்தித்து கடும் சோகத்தில் இருந்து வருகிறார் கோபி. இதையெல்லாம் சமாளித்தாலும் சாப்பாடு விசயத்தில் கூட ராதிகா கோபியை டார்ச்சர் செய்து வருகிறார்.
இப்படியிருக்கையில் கோபி - பாக்யாவின் மூத்த மகன் செழியன் - ஜெனி அப்பா, அம்மாவான விசயத்தை கோபி வீட்டிற்கு சென்று செய்தியை கூறுகிறார் கோபியின் அப்பா. இந்த விசய்த்தை கேட்டு சந்தோஷப்பட்ட கோபியை, தாத்தா தாத்தா என்று கிண்டல் செய்கிறார் கோபியின் அப்பா.
இதனால் கடுப்பாகி புலம்பிய கோபியை ராதிகா பார்த்து முறைக்க. தாத்தான்னு சொல்றது ஓவர் தான் போய் மாவு வாங்கிட்டு வாங்கன்னு சொல்லி செல்கிறார்.
ராஜாவா வாழ்ந்த இப்போ கூஜாவா வாழ்ற கோபி என்று புலம்பியே மாவு வாங்க செல்கிறார் கோபி. இதற்கு தான் ஆசைப்பட்டாய் பாலக்குமாரா என்று கிண்டல் செய்யும் வண்ணம் கோபியின் கஷ்டத்தை பார்த்து கேலி செய்து வருகிறார் நெட்டிசன்கள்.
உங்க வாழ்க்கைல விதி எப்படியெல்லாம் விளையாடுது பாருங்க.. ?
— Vijay Television (@vijaytelevision) November 8, 2022
பாக்கியலட்சுமி - இன்று இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/9lMApGOA6E