கோபியை திருமணம் செய்த ராதிகா!! தாத்தாவால் கதறி ஓடப்போகும் இரண்டாம் மனைவி..

Star Vijay Baakiyalakshmi
By Edward Nov 17, 2022 09:09 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக இல்லத்தரசிகளின் கஷ்டங்களை மையப்படுத்தி ஒளிப்பரப்பப்பட்டு வரும் சீரியல் பாக்கியலட்சுமி. சமீபத்தில் பாக்யாவை விவாகரத்து செய்த சில நாட்களில் குடும்பத்தை விட்டுவிடு ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

ராதிகாவின் கழுத்தில் தாலிக்கட்டியது முதல் இன்று வரை அவரை படாத வலிகளை சமாளித்து வருகிறார் கோபி. இரண்டாம் மனைவியின் மகள் மயூவையும் பார்த்துக்கொண்டு, பாக்யாவின் மகள் இனியாவையும் பார்த்து வருகிறார்.

இடையில் தாத்தா செய்யும் குறும்புத்தனத்தால் கோபி, ராதிகாவுக்கு இடையில் பல பிரச்சனைகள் வருகிறது. இந்நிலையில் இனியா அப்பா தான் முக்கியம் என்று கோபியுடன் ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார்.

இதனால் பாக்யா உள்ளிட்ட மற்றவர்கள் அதிர்ச்சியடைய, தாத்தாவை போய் இனியாவை கூப்பிட்டு வர கூறுகிறார்கள். ஆனால் தாத்தா என் பேத்தி இருக்கும் வீட்டுக்கு போறேன் என்று சூட்கேஷை எடுத்துக்கொண்டு இனியா இருக்கும் வீட்டுக்கு செல்கிறார்.

தாத்தாவை பார்த்ததும் கோபி, இனியா வரமாட்டாள் என்று கூற, என் பேத்தி இங்கத்தான் இருப்பான்னா நானும் இங்க தான் இருப்பேன் என்று கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

அவர் சென்றது ராதிகாவை எப்படியாவது கடுப்பேற்றி கோபியின் சுயரூபத்தை இனியாவுக்கு காட்ட வேண்டும் என்றும் மயூ டாடி டாடி கூப்பிடுவதை இனியா பார்த்து சண்டை போடவுள்ளதை பார்க்கவும் தானாம். இப்படி இனிமேல் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மாட்டிக்கொண்டு முழித்து படாதபாடு படவுள்ளார்.