இனிமே கோபி புஷ்பா புருஷன்.. சாபம் விட்டு புது அவதாரம் எடுக்கும் பாக்யாவின் மாமியார்..

Serials Baakiyalakshmi
By Edward Oct 06, 2022 08:20 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் இல்லத்தரசிகள் படும் கஷ்டங்களை பற்றி மையமாக எடுத்து ஒளிப்பரப்பு செய்து வரும் சீரியல் பாக்யலட்சுமி. விருப்பமில்லாமல் பாக்யாவை திருமணம் செய்து கொண்ட கோபி, ராதிகாவை அனைத்தையும் மீறி கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறார்.

கள்ளக்காதல் டூ திருமணம்

குடும்பத்தினருக்கு இந்த விசயம் தெரிய வர கோபி பாக்யாவுடன் விவாகரத்து பெற்று சண்டையும் போட்டு வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார். பின் ராதிகாவின் குடும்பத்தினருடன் சேர்ந்து திருமணம் செய்யவும் முடிவெடுக்க, அத்திருமணத்திற்கே பாக்யா கேட்ரிங் செய்துள்ளார். அது தன் கணவரின் திருமணம் தான் என்று தெரிந்து பாக்யா சமையலில் கவனம் செலுத்துகிறார். பின், கோபியின் அம்மா, அப்பா, மகள் இனியா ஆட்டோவில் வந்து இறங்கும் போது கோபி ராதிகாவின் கழுத்தில் தாலி கட்டிவிடுகிறார்.

இனிமே கோபி புஷ்பா புருஷன்.. சாபம் விட்டு புது அவதாரம் எடுக்கும் பாக்யாவின் மாமியார்.. | Baakiyalakshmi Serial Promo Gopi Radhika Marriage

ஈஸ்வரி சாபம்

இதனால் கோபத்தில் பாக்யாவின் மாமியார் ஈஸ்வரி, எப்படி நல்லா இருப்பீங்க என்றும் என் மருமகளுக்கு பேரப்பிள்ளைகளுக்கும் நாங்க இருக்கிறோம் என்று ஆறுதலாக சவால் விட்டு புது அவதாரம் எடுத்துள்ளார். இதை நெட்டிசன்கள் இன்றிலிருந்து கோபி புஷ்பா புருஷன் என்று அழைக்கப்படுவார் என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.