காதல் மன்னன்னு நினைப்பு!! தாத்தா கோபியால் கர்ப்பமான பாக்கியலட்சுமி ராதிகா..

Serials Baakiyalakshmi Reshma Pasupuleti
By Jai Apr 18, 2024 08:30 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி சீரியல். தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் எழிலை குழந்தை பெற்றுக்கொள்ளும் படி பாட்டி ஈஸ்வரி வற்புறுத்தி சண்டை போட்டு வருகிறார்.

எனக்கு கூடிய சீக்கிரமே இந்த வீட்டில் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்கவேண்டும் என்று கோபமாக பேசியிருக்கிறார். அதன்பின் ராதிகா அந்த நேரத்தில் வாந்தி எடுக்க, அதனால் கோபி அதிர்ச்சியடைகிறார்.

காதல் மன்னன்னு நினைப்பு!! தாத்தா கோபியால் கர்ப்பமான பாக்கியலட்சுமி ராதிகா.. | Baakiyalakshmi Serial Radhika Become Pregnant

ஓட்டலில் சாப்பிட்ட சாப்பாடு செட்டாகவில்லை என்பதால் ஆஸ்பிட்டல் போகலாம் என்று கோபி கூற மெடிக்கல் ஷாப் போகலாம் என்று ராதிகா கூறுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராதிகா, பிரக்னன்ஸி கிட் வாங்கி ராதிகா பரிசோதித்து பார்த்ததில் அவர் கர்ப்பமாக இருக்கிறார்.

இதனை கோபியிடம் ராதிகா கூறியிருக்கிறார். இந்த விசயம் இணையத்தில் பகிரப்பட்டு இந்த வயசு தேவையா கோபி என்று நெட்டிசன்கள் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.