கழுத்தை பிடித்து வீட்டு வெளியில் தள்ளிய அம்மா!! முழு வில்லியாக மாறிய கோபியின் இரண்டாம் மனைவி

Serials Baakiyalakshmi Reshma Pasupuleti
By Edward Jun 06, 2023 03:00 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. தற்போது பாக்யாவின் வீட்டில் இரண்டாம் மனைவி ராதிகாவுடன் வசித்து வரும் கோபிக்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

வேண்டுமென்றே பாக்யாவிடம் வம்புக்கு சண்டைக்கு போகும் ராதிகாவை அவரது மாமியார் கோபத்தில் கழுத்தை பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியில் தள்ளிவிட்டுள்ளார். இதனால் கோபமான ராதிகாவின் அம்மா போலிசாரிடம் புகாரளித்து மிரட்டியுள்ளார்.

சட்டப்படி இரண்டாம் மனைவி ராதிகா கணவர் இருக்கும் இடத்தில் தான் இருக்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்துள்ளார்.

இதுதான் கிடைத்த வாய்ப்பாக வீட்டிற்குள் முறைத்தபடி உள்ளே செல்கிறார் ராதிகா. இந்த சம்பவத்தால் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகி முழு வில்லியாக மாறி என்ன செய்யப்போகிறார் என்று இனிதான் தெரியவரும்.