அட்லீ-ஏஆர் முருகதாஸையே காப்பி அடித்த பாரதிகண்ணம்மா இயக்குநர்! வைரல் வீடியோ

bigil kannamma barathikannamma singapenne Spyder
By Edward Jun 28, 2021 08:00 PM GMT
Report

தொலைக்காட்சி தொடர்கள் தற்போது பெரும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. சீரியல் ஆரம்பித்து இரு வருடங்களுக்கு மேல் ஆகியும் ரசிகர்களை பதற்றத்தோடே வைத்து வருகிறது.

பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்த நடிகை ரோஷினி ஹரிபிரியனின் நடிப்பு பெரிய அளவு ஈர்த்து சில ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகினார். அந்த அளவிற்கு இளையோர்கள் வரை பாரதி கண்ணம்மா சீரியல் பிடித்தவொன்றாக இருக்கிறது.

இந்த வார எபிசோட்களில் ஹேமாவை கடத்தியவர்கள் யார் என்றும் பாரதி ஹேமாவை கண்டுபிடிக்கமுடியாம கண்ணாம்மாவை கைது செய்ய தூண்டி புகாரளித்தும் இருந்தார். கண்ணாம்மாவின் மாமியார் பெயில் வாங்கி வெளியே எடுத்துள்ளார். இதையடுத்து கண்ணாம்மாவும் ஹேமாவை தேடி செல்கிறார்.

அப்போது, கண்ணம்மா கண்ணில் பட்ட ஹேமாவை துறத்தி வரும் கும்பல் இருவரையும் அடிக்க ஆரம்பிப்பார்கள். அவர்களை தடுக்க சிங்கப்பெண்கள் பலர் அவர்களை அடித்து காப்பாற்றுகிறார்கள். அதன் பிரமோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதற்கு காரணம் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் தினமும் ஏதாவது ஒரு படத்திலிருந்து காட்சியை எடுத்து சீரியலில் வைத்துவிடுவார்.

அப்படி பிகில் படத்தில் இடம்பெற்று இருக்கும் சிங்கப்பெண்ணே பாடலும் ஸ்பைடர் படத்தில் பெண்கள் தாவிவரும் காட்சிகள் போன்றும் அந்த காட்சிகள் இடம்பெற்று எடுத்துள்ளனர்.