வெண்பா போட்ட மாஸ்டர்! ஹேமாவை கடத்தியதால் கண்ணம்மாவை கைது செய்த பாரதி? வைரல் வீடியோ..

Barathi Kannamma serial kannamma farinaazad televiton
By Edward Jun 21, 2021 12:21 PM GMT
Report

தொலைக்காட்சி தொடரில் பிரபலமான சீரியலாக கருதப்பட்டு டிஆர்பியில் நல்ல இடத்தை பெற்று தரும் தொடர் பாரதி கண்ணம்மா. பிரபல தொலைக்காட்சியில் சில ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

கையில் பையை ஏந்தி செல்லும் கண்ணாம்மாவை நெட்டிசன்கள் கலாய்க்கும் மீம்ஸ்களை வைரலானது. இதையடுத்து கதையை 8 வருடங்களுக்கு பிறகு காட்டி, வெண்பாவின் பல சூழ்ச்சிகளை காமித்து கோபத்தை ஏற்றி வருகிறது.

அந்தவகையில், ஹேமாவை ரௌடிகள் சிலர் கடத்தி சென்று நிலையில், அந்த நேரத்தில் கண்ணம்மா அங்கிருந்து ஆட்டோவில் கிளம்பி செல்வதை பாரதி பார்த்துவிடுகிறார். கண்ணம்மா தான் ஹேமாவை கடத்தி செல்கிறார் என சந்தேகத்தில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கிறார் பாரதி. ஹேமா எங்கே என்று போலிசார் கண்ணம்மாவை அடிக்க செல்ல வெண்பாவை கண்ணம்மா அடித்துவிடுகிறார்.

பின் அவரது மாமியார் சவுந்தர்யா ஜாமின் எடுத்து கூட்டிச்செல்கிறார். இனி யார் ஹேமாவை கடத்தியது பற்றிய கதைகளம் தான் செல்லும். தற்போது இந்த வீடியோ யுடியூப்பில் டிரெண்டிங் டாப்பில் இருந்து வைரலாகி வருகிறது.